Connect with us

செஸ் ஒலிம்பியாட்: 8 வயது சிறுமிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து!!!

FZAWsCcUEAAFnHF

தமிழகம்

செஸ் ஒலிம்பியாட்: 8 வயது சிறுமிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து!!!

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டார்.

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 3-வது சுற்றுகள் நடைபெற்று இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் சென்றார்.

அவரை சர்வதேச செஸ் கூட்டமைப்புகள், இந்திய செஸ் கூட்டமைப்புகள் அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்திய அணி விளையாடும் இடத்திற்கு சென்று பார்வையிட்ட தமிழக முதல்வர் ஒலிம்பியா நிர்வாகிகளுடன் ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

அதோடு வெளிநாட்டு வீரர்கள் எடுக்கும் உணவு மற்றும் தங்கும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் தமிழக வீரர் மற்றும் வீராங்கனைகள் வாழ்த்துகளை கூறினார்.

மேலும், பாலஸ்தீனம் நாட்டை சேர்ந்த 8 வயது சிறுமி ராண்டா சேடருக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தது மட்டுமல்லாமல் இதனை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top