செஸ் ஒலிம்பியாட்: ஜூலை 28-ஆம் தேதி 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை!!

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகின்ற 28-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.

இந்த போட்டியை பிரபலபடுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் போட்டியில் கலந்துகொள்வதற்காக 187 வெளிநாட்டு செஸ் வீரர்கள் சுமார் 2,500 பேர் தமிழகம் வருகை தரவுள்ளனர்.

இதற்காக நேற்றைய தினத்தில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

தற்போது பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதையொட்டி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஜூலை 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக கூறியுள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.