
தமிழகம்
செஸ் ஒலிம்பியாட் : இந்தியாவுக்கு முதல் வெற்றி!!
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஓபன் பிரிவு பி அணியில் விளையாடிய ரோனத் சத்வானி, ஐக்கிய அமீரக வீரர் அப்துல் ரகுமானை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது இந்தியாவில் முதன் முறையாக நடைபெறுகிறது. குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் சென்னை மகாபலிபுரத்தில் நேற்று கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
இன்றைய தினத்தில் முதல் சுற்று ஆட்டம் தொடங்கிய நிலையில் இந்தியா சார்பில் பொது பிரிவில் 3 அணிகளும் பெண்கள் பிரிவில் 3 அணிகள் என மொத்தம் 6 அணிகள் பங்கேற்றனர்.
அப்போது ஐக்கிய அமீரக வீரர் அப்துல் ரகுமானை வீழ்த்தி ஓபன் பிரிவு பி அணியில் விளையாடிய ரோனத் சத்வானி வெற்றி பெற்றார்.
இருப்பினும் மற்ற 3 அணிகள் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவிற்கு 2 புள்ளிகள் கிடைக்கும் என சூழலில் இந்திய வீரர்கள் விளையாடி வருவதாக கூறப்பட்டுள்ளது.
