இன்று மாலை செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா-சிறப்பு விருந்தினராக எம் எஸ் தோனி!!

இரண்டு வாரங்களாக நம் தமிழகத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த போட்டியானது இன்றைய தினத்துடன் நிறைவு பெறுவதாக தெரிகிறது. இதனால் இன்று மாலை செஸ் ஒலிம்பியா போட்டிக்கான நிறைவு விழா கொண்டாடப்பட உள்ளது.

இது குறித்தான கூடுதல் தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா இன்று மாலை சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு விழாவில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வழங்குகிறார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். இன்று மாலை ஆறு மணி முதல் நடக்கும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக செஸ் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்கிறார்.

மேலும் இந்தியாவிற்கு மூன்று உலக கோப்பைகளை பெற்றுக் கொடுத்த மகேந்திர சிங் தோனியும் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் தோனியை பார்ப்பதற்காக ஆவலோடு காத்துக் கொண்டுள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.