Connect with us

செஸ் ஒலிம்பியாட்: 28, 29-ம் தேதிகளில் டிரோன்கள் பறக்க தடை!!!

drne

தமிழகம்

செஸ் ஒலிம்பியாட்: 28, 29-ம் தேதிகளில் டிரோன்கள் பறக்க தடை!!!

சென்னை மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கோலாகலமாக தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் 180-க்கும் மேற்பட்ட உலகநாடுகளை சேர்ந்த சுமார் 2500 வீரர்கள் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் போட்டிக்கான அனைத்து வேலைகளும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. குறிப்பாக அரங்கம் கலை நுட்பத்துடன் தயார் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இப்போட்டியில் சிறப்பு விருந்தினராக கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா போன்றவர்கள் வரவுள்ளதால் பாதுகாப்பு பணியானது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

அந்த வகையில் பிரதமர் மோடியின் வருகையையொட்டி வருகின்ற 28,29-ம் தேதிகளில் சென்னையில் டிரோன்கள் பறக்க அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

அதே போல் ஆளில்லா வான்வெளி விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top