
பொழுதுபோக்கு
செஸ் ஒலிம்பியாட்: இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார்!!!
தமிழகத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தொடக்க விழாவிற்காக நேரு விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.
செஸ் ஒலிம்பியாட் தொடரில் உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனமும் சென்னை மீது இருக்கும் என்பதால் அதற்கு ஏற்ப அரங்கம் கலை நுட்பத்துடன் தயார் செய்யப்பட்டு வருகிறது.
தொடக்க விழாவினை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயற்கை உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விழாவில் தமிழகத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் தமிழகம், கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதனிடையே நுழைவு வாயில் தொடங்கி அடங்கும் முதல் செஸ் காய்களுடன் இருஉருவங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடக்க விழாவில் சர்வதேச வீரர்கள் பங்கேற்பதால் பாதுகாப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.
