Entertainment
பெருந்தன்மையாக நடந்துகொண்ட சேரன்!!!
விஜய் தொலைக்காட்சியில், பிக் பாஸ் 3 நிகழ்ச்சி சண்டைக் களமாக போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் 30 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், 8 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர்.
தற்போது பிரச்சினையை மீண்டும் அதிகரித்து, டிர்பியை எகிறச் செய்ய வெளியேற்றப்பட்ட சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா ஆகியோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

நேற்றைய நிலையில், மோகன் வைத்யாவும், ஷாக்சியும் சேரன், வனிதா, ஷெரினுடன் பேசிக் கொண்டிருந்தனர், அதேபோல உள் நுழைந்த அபிராமி,
சாண்டி- கவின் குரூப்புடன் அமர்ந்து கொண்டு உள்ளிருந்தோர்களை கலாய்ப்பதன ரசித்துக் கொண்டிருந்தார்.
சாக்ஷியும் மோகன் வைத்யாயும் வெளியில் நடந்ததைப் பற்றி கூறினர், வனிதாவும், ஷெரினும் உள்ளே நடந்தது பற்றியும் கூறினர்.
மோகன் வைத்யா, சேரனிடம் லோஸ்லியா- கவினுடன் சேர்ந்துகொண்டு சேரனைப் பற்றி கிண்டலடிக்கும்போது சிரிப்பதையும், சேரனைப் பற்றி புறணி பேசுப் போது அமைதியாக இருப்பதும், ஒருமுறைகூட சேரனுக்காக சப்போர்ட் பண்ணாமல் இருப்பது பற்றியும் கூறினார்.
ஆனால் சேரனோ எப்போதும்போல பெருந்தன்மையாக அப்படியா? என்று கேட்டுவிட்டு சரி என்பதுபோல விட்டுவிட்டார். லாஸ்லியாவின் முகம் நிச்சயம் வெளிப்படும் என்று போட்டியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
