Connect with us

மகள் லாஸ்லியாவை நினைத்து வருந்தும் சேரன்!!

Entertainment

மகள் லாஸ்லியாவை நினைத்து வருந்தும் சேரன்!!

இப்போதுதானே தொடங்கியது என்று நினைத்து முடிக்கையில், இல்லை இல்லை இன்னும் முடியவே 30 நாட்கள் மட்டுமே உள்ளது என்கிற நிலையில் செல்கிறது பிக் பாஸ் 3.

அந்த 100 நாட்களில், கமல் ஹாசன் தோன்றும் அந்த வார இறுதிக்கு இருக்கும் மதிப்பே தனிதான். பார்வையாளர்கள் பலரும், வார இறுதியில் இவை பற்றி பேசப்படுமா? என்ற ஆர்வத்திலேயே இருப்பர்.

00c5c62b5369d5e1fc9066021b61d3c5

லாஸ்லியா சேரனிடம் பொய்யான பாசத்தினைக் காட்டினாலும், சேரனால் அப்படி நடந்துகொள்ள இயலவில்லை. அவர் லாஸ்லியா செய்யும் தவறுகளை மறந்து, எப்போதும் அன்புடன் நடந்துகொள்ளவே நினைக்கிறார்.

ஆனால் லாஸ்லியாவோ அவ்வப்போது அட்டென்டன்ஸ் போட, சேரனிடம் ஃபார்மலிட்டிக்குப் பேச செய்கிறார். அதிலும் நேற்று முன் தினம் நடந்த நிகழ்ச்சியில், எந்த விஷயமும் எளிதில் கிடைக்கும்போது அதன் மதிப்பு தெரியாது என்று நேற்று சேரன் வனிதாவிடம் வருத்தப்பட்டார்.

அதாவது அவர் தன்னுடைய மகளாக நினைக்கும் லாஸ்லியாவினைப் பற்றி அப்படி குறிப்பிட்டுப் பேசினார்.

 சேரன் பலமுறை லாஸ்லியாவினை நினைத்து வருத்தப்பட்டதுண்டு, குறிப்பாக லாஸ்லியா சேரனை நாமினேட் செய்தபிறகு இது நடக்காது என்று எதிர்பார்த்தநிலையில், அவருடைய அன்பு குறையாமல் எப்போதும்போல தன் மகளிடம் பாசமாகவே உள்ளார்.

உண்மையிலேயே பிக் பாஸ் வீட்டிற்குள் மிக நேர்மையான மனிதராக சேரன் தன்னை பலமுறை நிரூபித்திருக்கிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top