Entertainment
லாஸ்லியாவிடம் மனம் வருந்திய சேரன்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி டிஆர்பி ரீதியாக ஏறியும் இறங்கியும் சென்று கொண்டிருக்கிறது.
தற்போது சேரன், கவின், சாண்டி, தர்ஷன், முகென், வனிதா, ஷெரின், லோஸ்லியா ஆகிய 8 போட்டியாளர்களுக்கு இடையே நாள் ஆக ஆக பிரச்சினை அதிகமாகிறது.
இதில் கவின் – லோஸ்லியா இருவரும் மற்றவர்களின் விளையாட்டுகளையும் விளையாட விடாமல் காதல் செய்வது, பிரிவது என ட்ராமா கிரியேட் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.

இதில் அதிக மன உளைச்சலுக்கு ஆளான விஷயம், சேரன் – லாஸ்லியாவினை பிரிக்க நினைத்து, சேரனை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கினார் கவின்.
நேற்று லாஸ்லியா சேரனை அழைத்து, நீங்கள் நடிக்கிறீர்களா? என்று கேட்க, நடிக்கவில்லை என்றும், ஆரம்பத்தில் எப்படியிருந்தோம். இப்போது எப்படி இருக்கிறோம். நீ எனக்கான நேரத்தை ஒதுக்காதது, எனக்கு மன வருத்தமாக உள்ளது.
என்னுடைய மகளை என்னிடமிருந்து பிரித்து விட்டார்கள் என்று வருத்தமாக உள்ளது. என்னிடம் பேச உனக்கு 30 நிமிடம்கூட நேரம் ஒதுக்கமுடியவில்லை. என்னிடம் இந்த விஷயங்களை முன்பே பேசி இருந்தால், இவை முன்பே சரி ஆகியிருக்கும் என்று கூறினார்.
