Entertainment
லோஸ்லியா விஷயத்தில் ஒரு சிறந்த தந்தையாக செயல்பட்ட சேரன்.!
விஜய் டிவியில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி அநியாயங்களைத் தாண்டி வெற்றி நடைபோடுகிறது, பாரபட்சம் காட்டுவதில் பிக் பாஸை அடித்துக் கொள்ளவே முடியாது. கமல் ஹாசனையும் கேள்வி கேட்கும் அதிகாரத்தில் கை வைத்துள்ளதால் அவரும் நிகழ்ச்சியில் பட்டும்படாமலே இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
காலையில் மொக்கை கதை சொல்வதாக கூறி ஷெரீனை அழவைத்துவிட்டார் கஸ்தூரி. அதன்பின்னர் கஸ்தூரி தும்ம, அதுவும் பிரச்சினையாகிவிட்டது. அவர் விளையாட்டுக்குப் பண்ணினால் கூட, அது விபரீதமாகி விடுகிறது.

கவினை அழைத்து தனியாக பேசினார் சேரன், லோஸ்லியா தன்னுடன் இருப்பதைவிட கவினுடன் இருக்கும் நேரமே அதிகம், அதனால் அவரை பார்த்துக் கொள்ளுமாறு கூறினார். அப்போது கவினும் குழந்தைபோல் பார்த்துக் கொள்வதாகக் கூறினார்.
அதன்பின்னர் லாஸ்லியாவை அழைத்துப் பேசிய சேரன், நான் எதையும் தவறாகப் பேசவில்லை, வெளியே சென்று எந்த முடிவாக இருந்தாலும் எடுக்கக் கூறினார்.
அப்போது பார்வையாளர்களைப் பற்றி எனக்கு கவலை இல்லை, யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை நான் அதைப்பற்றி கவலைப்பட மாட்டேன், வீட்டில் இருப்போருடன் கலந்து பேசி முடிவு எடுப்பேன் என்பதுபோல கூறினார். இதன்மூலம் சேரன் ஒரு சிறந்த தந்தை என்பதனை உணர்த்திக் காட்டிவிட்டார்.
