Entertainment
பிக் பாஸ் வீட்டில் தலைவரானார் சேரன்..!
75 வது நாளை நெருங்கும் நிலையில், பிக் பாஸ் சண்டையே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது, அதுவும் குறிப்பாக இந்த வாரம் ஆரம்பித்தது முதலே கலகலப்பாக இருக்கிறதோ இல்லையோ, பெரிதாக சண்டை எதுவும் இல்லாமலே சென்று கொண்டிருக்கிறது.
இந்த வாரத்திற்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் நேற்று முன்தினம் முடிவடைந்தது. அதில் சிறப்பாக விளையாடியவர்களாக சாண்டி, சேரன் மற்றும் லோஸ்லியா தேர்வாகினர்.

இந்தமுறை சிறை தண்டனை கிடையாது என பிக்பாஸ் கூற, ஹவுஸ்மேட்ஸ் மகிழ்ச்சியில் குதித்தனர். எப்போதும் ஜெயில் தண்டனையில் தான் பிரச்சினையே எழும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் வீட்டில் தலைவருக்கான போட்டி நேற்று நடைபெற்றது. அதாவது ஒரு பலகையில் சேரன், லோஸ்லியா, சாண்டி ஆகியோருடைய பெயர் எழுதப்பட்டுள்ளது. குலுக்கல் முறையில் சீட்டுகள் எடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் வாக்குகள் செலுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஒரு சீட்டினை எடுத்து, வாக்குகள் போட, அதன் அடிப்படையில் சேரன் 5 வாக்குகள் பெற்றார். சாண்டி 4 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திலும், லாஸ்லியா 1 வாக்கு பெற்று மூன்றாவது இடத்திலும் இருந்தனர்.
அதன்படி முதலிடம் பிடித்த சேரன் இந்தவாரத்தின் தலைவரானார்.
