Connect with us

சென்னை: விமானத்தை தரையிறங்குவதில் 100 சதவீதம் பெண்கள் பங்கேற்பு!

flight

Tamil Nadu

சென்னை: விமானத்தை தரையிறங்குவதில் 100 சதவீதம் பெண்கள் பங்கேற்பு!

சென்னை: விமானத்தை தரையிறங்குவதில் 100 சதவீதம் பெண்கள் பங்கேற்பு!

தற்போது உள்ள காலத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் உயர்ந்து உள்ளனர். இதனால் இன்றைய தினம் உலகமெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. வீடுகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் முக்கிய பங்காற்றி வரும் பெண்களுக்கு போற்றும் விதமாக மகளிர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று 29 பெண்களுக்கு குடியரசுத்தலைவர் நாரி சக்தி விருதினை வழங்கினார். இந்த நிலையில் சென்னை விமானத்தை தரை இறக்குவதில் 100 சதவீதம் பெண்கள் ஈடுபட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை, தகவல்தொடர்பு பணிகளில் 100 சதவீதம் பெண்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். தென்மண்டல விமான நிலையங்களில் ஆணையர் அலுவலகத்தில் பெண் பொறியாளர்கள் உட்பட 287 பேர் பெண் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

இன்று காலை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வந்த விமானத்தை தரையிறக்கும் பணியில் 32 பெண்கள் ஈடுபட்டனர். பெண்களின் சிறப்பான பணியை பாராட்டி தென்மண்டல விமான நிலையங்களின் ஆணையர் மாதவன் பரிசு வழங்கினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top