சென்னையில் சோகம்!! குடிபோதையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட இளைஞர் பலி!!

சென்னையில் குடிபோதையில் அளவுக்கு அதிகமாக சிக்கன் ரைஸ் சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த வியாசர்பாடியை சேர்ந்தவர் 21 வயதான மகாவிஷ்ணு. இவர் பிசிஏ படித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றைய தினம் மகா விஷ்ணு தன்னுடைய நண்பர் ராம்குமார் என்பவரின் பிறந்தநாளை கொண்டாடியதாக கூறப்படுகிறது.

9 மாவட்டங்களுக்கு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை..!!

அப்போது மகா விஷ்ணு அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, வயிறு முட்ட சிக்கன் ரைஸ் சாப்பிட்டதாக தெரிகிறது. பின்னர் வீட்டிற்கு சென்றுள்ள மகா விஷ்ணு தூக்கியுள்ளார்.

இதற்கிடையில் நீண்ட நேரமாகியும் மகா விஷ்ணு தூக்கத்தில் இருந்து எழுந்திரிக்காகதால் பதறிபோன உறவினர்கள் உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

விடுதலையான 4 பேர் இலங்கைக்கு அனுப்பப்படுவர் – கலெக்டர் பேட்டி!

அப்போது மகாவிஷ்ணுவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவறிந்து விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment