சென்னை-குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் சில சுவாரஸ்யங்கள்..!

சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான நேற்று நடந்த போட்டியில் பதினைந்து ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடந்த சில சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை மற்றும் குஜராத் அணிகள் இதுவரை நான்கு முறை மோதியுள்ள மோதியுள்ள நிலையில் நான்கில் மூன்றில் குஜராத் அணியும் ஒரே ஒரு போட்டியில் சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ipl dhoni

மேலும் சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்கு போட்டிகளிலும் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் அரை சதம் அடித்துள்ளார் என்பது மேலும் ஒரு சுவாரசியமான தகவலாக காணப்படுகிறது.

மேலும் நேற்றைய போட்டியில் தான் குஜராத் அணி முதல் முறையாக 20 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் 20 வது ஓவரின் கடைசி பந்தியில் தனது பத்தாவது விக்கெட்டை குஜராத் அணி இழந்தது. இதனை அடுத்து இந்த சீசனில் முதல் முறையாக அந்த அணியை ஆல் அவுட் ஆகிய பெருமையும் சென்னை அணிக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...