சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திண்டிவனம் அருகே ஓங்கூர் ஆற்றில் இருந்த பாலம் கடந்த 27-ம் தேதி பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையானது ஒருவழி சாலையாக வாகனங்கள் இயக்கப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதால் சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊருக்கு செல்வதற்கு படையடுத்துள்ளனர். அதே சமயம் ஒரு வழி பாதையாக வானங்கள் அனுமதிக்கப்படுவதால் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த போக்குவரத்து நெரிசல் நள்ளிரவு 10 மணி முதல் இன்று காலை வரையில் சுமார் 7 கி.மீ தூரம் வரை வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்ட நெரிசலை தடுப்பதற்காக போலீசார் தீவிர பணியில் ஈடுப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.