சாலைகளில் வெள்ளம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதையடுத்து ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

இன்று காலை 6 மணி முதல் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை போக்குவரத்தின் தற்போதைய நிலவரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மழை பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கப்பாதைகள் பின்வருமாறு:

1. ஈவேரா சாலை கங்கி ரெட்டி சுரங்கப்பாதை

2. வியாசர்பாடி சுரங்கப்பாதை

3. கணேஷபுரம் சுரங்கப்பாதை ஆகியவை மூடப்பட்டுள்ளன

மேலும் மழை நீர் பெருக்கு காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட பகுதிகள் பின்வருமாறு:

1. ஈவேரா சாலையில் சென்னை சென்ட்ரல் சந்திப்பிலிருந்து நாயர் சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் ஈவேரா சாலை காந்தி இர்வின் சந்திப்பு வழியாக எழும்பூர் நோக்கி திருப்பி விடப்படும்

2. பேந்தியன் ரவுண்டானாவில் இருந்து ராஜரத்தினம் மைதானம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அவ்வாகனங்கள் பேந்தியன் சாலை வழியாக செல்லலாம். மார்ஷல் ரோட்டில் இருந்து பேந்தியன் ரவுண்டானாவை நோக்கி வாகனங்கள் வர அனுமதி உண்டு என சென்னை மாநகர போக்குவரத்து தெரிவித்துள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment