‘இஷ்டப்படி விதிகளை மீற வேண்டாம் கஷ்டப்பட வேண்டி வரும்’- சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை..!!

இன்றைய தினம் சென்னை மாநகராட்சி போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதுவும் குறிப்பாக இருசக்கர வாகனத்தில் பின் இருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கடந்த 1.5.2022 முதல் 22.5.2002 வரை 22 ஆயிரத்து 990 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

நகரின் முக்கிய 11 சந்திப்புகளில் 15 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை தானாகவே வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை தானியங்கி முறையில் போட்டோ எடுக்கும் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக காணப்படுகிறது.

இந்த அதிநவீன கேமராக்கள் மூலம் 1.4.2002 முதல் 22.5.2022 வரை 17 ஆயிரத்து 994 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

போக்குவரத்து விதிகளை மதித்து வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களை ஏற்குமாறு சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இஷ்டப்படி விதிகளை மீற வேண்டாம் கஷ்டப்பட வேண்டி வரும் என்றும் எச்சரித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment