
செய்திகள்
மீண்டும் சென்னையில் போக்குவரத்து மாற்றம்: மெட்ரோ பணி எதிரொலி
மீண்டும் சென்னையில் போக்குவரத்து மாற்றம்: மெட்ரோ பணி எதிரொலி
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக மெட்ரோ ரயில் சென்னை மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்து வரும் நிலையில் கூடுதலாக இரண்டு வழிப்பாதைகள் தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னை அயனாவரம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஒன்றில் கூறப்பட்டிருப்பதாவது:
அக்டோபர் 19.10.2021 செவ்வாய் கிழமை முதல் ஆண்டர்சன் சாலை ஒரு வழி பாதையாக மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே 19.10.2021 அன்று முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.
* ஆண்டர்சன் சாலையில் RTO அலுவலகம் சந்திப்பு முதல் கான்ஸ்டிபன் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது.
* பில்கிங்டன் சாலையில் கொன்னூர் நெடுஞ்சாலை முதல் கான்ஸ்டிபன் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது.
* ஆண்டரசன் சாலையில் அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து வழக்கம் போல் பெரம்பூர் நோக்கி செல்லலாம்.
* ஆண்டர்சன் சாலையில் கான்ஸ்டிபன் சாலை சந்திப்பிலிருந்து அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்ல இயலாது.
* மோட்டர் சைக்கிள்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் கான்ஸ்டிபன் சாலை மற்றும் பில்கிங்கடன் சாலை சந்திப்பிலிருந்து பில்கிங்டன சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.
டேக் டைவர்சன்.. மெட்ரோ ரயில் வேலையால் மாற்றம்: சென்னை போக்குவரத்து காவல்துறையின் முக்கிய அறிவிப்பு
* கனரக வாகனங்கள், கான்ஸ்டிபன் சாலை மற்றும் பில்கிங்டன் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி கான்ஸ்டிபன் சாலை (ரயில்வே மருத்துவமனை) போர்சுகீஸ் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.
* கொன்னூர் நெடுஞ்சாலையிலிருந்து பில்கிங்டன் சாலை வழியாக பெரம்பூர் நோக்கி செல்ல அனுமதியில்லை. அவ்வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் கொன்னூர் நெடுஞ்சாலையில் நேராக சென்று இடது புறமாக திரும்பி ஆண்டர்சன் சாலை மற்றும் கான்ஸ்டிபன் சாலை வழியாக செல்லலாம்.
இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) October 17, 2021
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) October 17, 2021
