சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமானம்.. அதிரடி அறிவிப்பு

சென்னை – யாழ்ப்பாணம் இடையே நேரடி விமானம் இயக்கப்படும் என இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்கு பகுதியான யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு ஏற்கனவே விமானங்கள் இயங்கி வந்த நிலையில் இடையில் சிலகாலம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது சென்னை – யாழ்ப்பாணம் இடையே மீண்டும் விமானங்களை இயக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இலங்கையின் சுற்றுலாத்துறை தற்போது வளர்ச்சி பெற்று வருவதை அடுத்து மீண்டும் விமானத்தை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் நலிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்த விமான சேவை உதவியாக இருக்கும் என்றும் இலங்கைக்கு அதிக அளவில் அன்னியச் செலவாணியை ஈட்டித்தரும் முக்கிய ஆதாரமாக சுற்றுலா துறை இயங்கி வருவதாகவும் இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்து 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவிய நிலையில் உலகம் முழுவதும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டு இருந்த போது சென்னை – யாழ்ப்பாணம் இடையிலான விமானம் சேவையும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சென்னை – யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவை இயக்கப்பட இருப்பதாக இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது சுற்றுலாப் பயணிகளுக்கும் இலங்கை சென்று வருபவர்களுக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.