சென்னை திருப்பதி சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க நடிகையும் எம்.எல்.ஏவுமான ரோஜா கடும் எதிர்ப்பு

தமிழ்நாட்டில் மட்டும் எங்கும் இல்லாத அளவு அதிகமான டோல்கேட்டுகள் இயங்குகின்றன. தேவையில்லாமல் 50க்கும் மேற்பட்ட டோல்கேட்டுகள் தமிழ்நாட்டில் இருப்பதாக ஏற்கனவே நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ வேலு கருத்து தெரிவித்துள்ளார்.

பொதுவாக தமிழ்நாட்டில் உள்ள டோல்கேட்டுகளில் அடிக்கடி பெரிய கலவரங்களே நடப்பதுண்டு பலர் ரோடு சரியில்ல எப்படி காசு வாங்கறிங்க, ஏன் இவ்வளவு காசு வாங்கறிங்க என்று டோல்கேட்டில் சண்டை பிடிப்பதை வழக்கமாக டோல்கேட்டுகளில் பார்க்கலாம்.

கடந்த காலங்களில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்றோர் இந்த டோல்கேட்களில் அதிகம் பிரச்சினைகள் செய்து அது செய்திகளாக வந்து இருந்ததை பார்க்கலாம்.

இந்நிலையில் நடிகையும் எம்.எல்.ஏவுமான ரோஜாவும் திருப்பதி சென்னை இடையே உள்ள  சாலைகள் கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக குண்டும் குழியுமாக உள்ள இந்த நேரத்தில் டோல்கேட்டில் கட்டணம் வசூலிப்பது தவறானது என கருத்து கூறியுள்ளார்.

இது குறித்து விஜயவாடாவில் உள்ள போக்குவரத்துத்துறை செயலாளர் கிருஷ்ண பாபுவிடம் நகரி எம்எல்ஏவான ரோஜா புகார் மனு அளித்தார்.

கிருஷ்ணபாபுவும் சென்னை நெடுஞ்சாலைத்துறையினரும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment