சென்னையை சூழ்ந்த பட்டாசு புகை!! ஒருவர் 31 சிகெரட் பிடிப்பதற்கு சமம்!!

தீபாவளுக்கு வெடித்த பட்டாசு புகையால் சென்னை இப்போது வரையில் மூச்சு விட முடியாமல் திணறி கொண்டிருக்கிறது என பூவுலகின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தீபாவளி தினத்தன்று சென்னையில் காற்றின் தரமானது கிட்டத்தட்ட 786AQI வரை பதிவாகியுள்ளதாக மாசு கட்டுப்பாடு வாரியம் கூறியுள்ளது.

இத்தகைய பதிவானது ஒருவர் 31 கிகெரட் பிடித்தற்கு சமம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே அன்றைய தினத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசு காரணமாக எத்தனை கர்பிணி பெண்கள் மற்றும் ஆஸ்துமா பாதிக்கப்பட்டுள்ளது குறித்து அரசு பட்டியலிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் எத்தனை நோயாளிகள் மற்றும் வயதானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்த பட்டியலை அரசு வெளியிட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து டெல்லி அரசு போல தமிழக அரசும் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment