சக்கரம் கட்டி ஆடும் பாண்டியா..!! சமாளிக்குமா நம் சென்னை சூப்பர் கிங்ஸ்?
இன்றைய தினம் சூப்பர் சண்டே என்பதால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதில் முதலாவதாக பஞ்சாபுக்கு ஹைதராபாத்துக்கும் இடையே இன்று மாலை பலப்பரிட்சை நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது. இதனால் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற முனைப்போடு ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் ரன் குவித்து கொண்டு வருகின்றனர்.
இன்று இரவு 07:30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் அணியுடன் பலப்பரீட்சை மேற்கொள்கிறது. இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 ஆட்டங்களில் ஒரு போட்டியை மட்டும் வெற்றி கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த போட்டியும் கூட திக் திக் நிமிடங்கள் ஆகவே காணப்பட்டது. இதனால் ஆட்டத்தில் குஜராத் அணியுடன் மோதுகிறது இந்த நிலையில் குஜராத் அணியின் கேப்டனாக உள்ள பாண்டியா வேற லெவல் ஆக பேட்டிங் பவுலிங் செய்து வருகிறார்.
அவர் ஆடிய 5 ஆட்டங்களில் 288 ரன்கள் குவித்துள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது. இதனால் இன்றைய ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சற்று கடினமாகவே காணப்படும் என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது.
