Career
சென்னை சிப்காட் நிறுவனத்தில் Assistant Engineer காலிப்பணியிட அறிவிப்பு!!
சென்னை சிப்காட் நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Engineer பணிக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பதவி:
Assistant Engineer – 5
பணி விவரம்:
சென்னை சிப்காட் நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Engineer பணிக்கான காலிப்பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
வயது வரம்பு :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கானது வயது வரம்பு குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்து இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பானது 30 வயது பூர்த்தி அடைந்து இருத்தல் வேண்டும்.
சம்பள விவரம்:
சம்பள விவரம் – குறைந்தபட்சம் ரூ.36,700/-
அதிகபட்சம் ரூ.1,16,200/- வரை
கல்வித்தகுதி: :
Assistant Engineer – இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்போர் சிவில் பாடப்பிரிவில் பொறியியல் அல்லது தொழில்நுட்ப பட்டம் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
பணி அனுபவம்:
Assistant Engineer – பணி அனுபவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
தேர்வுமுறை :
1. Written Test
2. Interview
விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
www.sipcot.tn.gov.in என்ற ஆன்லைன் முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 20.03.2021 ஆம் அன்றுக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
