தற்போது கொரொனாவின் மூன்றாவது அலையாக ஓமிக்ரான் தொற்று பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த தொற்று இந்தியா முழுவதும் சிறிது சிறிதாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் சுகாதார விதிமுறைகளையும் பாதுகாப்பு விதிமுறைகளையும் மீறி செயல்படுபவர்களுக்கு அபராதம் விதிக்க சுகாதாரத்துறை செயலர் சார்பில் உத்தரவு இடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று கோவை நகரில் இயங்கி வரும் பிரபல ஜவுளிக்கடையான சென்னை சில்க்ஸில் அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
கடையில் வேலை செய்த 15க்கும் மேற்பட்டோர் மாஸ்க் அணியாமல் இருந்ததால் மாநகராட்சி அதிகாரிகள் கடையை பார்வையிட்டனர்.
இதில் மாஸ்க் பலர் அணியாததால் கடைக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கோவை மாநகராட்சியின் இந்த அதிரடி நடவடிக்கையால் இனி நிறுவனங்கள் சரியான பாதுகாப்பு வழிமுறையை பின்பற்றும் என நம்புவோம்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.