சென்னை,செங்கல்பட்டில் பவர் கட்! ஆனால் விமான சேவை இயக்கம்!!

தற்போது நம் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் அதி கனமழை பெய்து வருகிறது.

மின்சாரம் துண்டிப்பு

இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது.

சென்னையில் மழை நீர் தேங்கி உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 36 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 40 கிலோ மீட்டர் முதல் 45 கிலோ மீட்டர் வரை காற்று வீசும் என்பதால் மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். இவ்வாறு இருக்கையில் சென்னையில் வழக்கம் போல விமான சேவை இயங்குவது பலருக்கு ஆச்சரியத்தையும் கொடுத்துள்ளது. சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் நிலையிலும் விமானங்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment