சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை: அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று 21 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை என சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில் நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருவதாகவும் இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை பார்த்துக்கொண்டே மாவட்ட நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து சென்னையை சேர்த்து மொத்தம் 22 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment