சென்னையில் தொடங்கியது மழை.. டுவிட்டரில் டிரெண்டாகும் #ChennaiRains ஹேஷ்டேக்

வங்க கடலில் கடந்த சில நாட்களுக்கு முன் தோன்றிய காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது புயலாக உருவெடுத்து உள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த புயல் கரையை நெருங்கி வருகிறது என்றும் அதனால் பலத்த காற்று மற்றும் மழை பெய்ய தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளை முதல் சென்னையில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் சென்னையில் உள்ள ஒரு சில பகுதிகளில் மழை தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. சென்னை அண்ணா சாலை, தேனாம்பேட்டை, மயிலாப்பூர் உள்பட ஒரு சில பகுதிகளில் தற்போது லேசான மழை பெய்து வருவதாகவும் இந்த மழை மாலையில் கனமழையாக பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

rain2

இந்த நிலையில் சென்னை மழையை எதிர் நோக்க சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் மீட்பு படையினர் தயார் நிலையில் இருப்பதால் எந்த பகுதியில் சேதம் ஏற்பட்டாலும் உடனடியாக தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் மிக மிக கனமழை பெய்து சென்னையையே மூழ்கடித்தது என்பது தெரிந்ததே. அதே போன்ற ஒரு மழையை தற்போது எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுவதால் சென்னை மக்களின் மனதில் அச்சம் எழுந்துள்ளது. சென்னையில் மழை தொடங்கி விட்டதை அடுத்து #ChennaiRains என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.