சென்னை தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: நோயாளிகள் அதிர்ச்சி..!!

சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2-வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை கோபாலபுரத்தில் பிரபல தனியார் மருத்துவ மனை இயங்கி வருகிறது. இந்நிலையில் மருத்துவ ம்னையின் 2-வது தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அனைவருக்கும் வீடு திட்டம்: இன்று முதல் கணக்கெடுப்பு துவக்கம்!!

இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்ட உடனேயே உள்நோயாளிகளை மருத்துவ மனை ஊழியர்கள் பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளதாக தெரிகிறது. அதோடு தீ விபத்தினை தடுக்க முதற்கட்ட பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

அதோடு தேனாம்பேட்டை, அசோக் நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் 33 வார கர்ப்பத்தை கலைக்க உயர்நீதிமன்றம் அனுமதி!!

மேலும், நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டுமென்றால் அருகில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மருத்துவ மனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பயணிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.