Connect with us

#BREAKING துப்பாக்கியால் சுட்டு ஆயுதப்படை காவலர் தற்கொலை… வெளியானது பரபரப்பு காரணம்!

Police

செய்திகள்

#BREAKING துப்பாக்கியால் சுட்டு ஆயுதப்படை காவலர் தற்கொலை… வெளியானது பரபரப்பு காரணம்!

குடும்ப தகராறு காரணமாக பெரியமேடு நேரு உள்விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை போலீசார், செந்தில் குமார் துப்பாக்கியால் தனக்கு தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை பெரியமேடு நேரு உள்விளையாட்டு அரங்கில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுத படை காவலர் செந்தில்குமார் தன் துப்பாக்கியால், சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேரு உள் விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா கோலாகலமாக நடந்தது. பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், உள்ளிட்டோ இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மகாபலிபுரத்தில் நடந்து வரும், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நிறைவு விழா வரும் 10ம் தேதி இதே அரங்கில் நடைபெற உள்ளது. இதையொட்டி, உள்விளைாயாட்டு அரங்கில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளது.

100 கணக்கான ஆயுத படை போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாவட்டம், செல்லூர், சுயராஜ்யபுரத்தைச் சேர்ந்த பிச்சை ஜெயந்தி மாலா தம்பதியினர் மகன் செந்தில் குமார் என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் கடந்த, 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி, ஆயுதப்படை காவலராக பணியில் சேர்ந்தார். இவருக்கு திருமணம் ஆகி, உமா தேவி என்கிற மனைவியும், ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் தற்போது எழும்பூர் கெங்கு தெருவில் உள்ள, ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வந்தார்.

நேற்று காலை, நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்தார். நன்பகல் 12 மணியளவில் உள்விளையாட்டு அரங்கில் உள்ள கழிவறை பகுதியில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.

அதிர்ச்சி அடைந்த சக காவலர்கள், கழிவறை கதவை உடைத்த கமாண்டர் உள்ளே சென்று பார்த்த போது, உள்ளே சென்று பார்த்த போது, செந்தில் குமார், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடப்பதை பார்த்தனர்.

வலதுபுற நெஞ்சில் நெஞ்சில் தான் வைத்திருந்த எஸ்.எல்.ஆர். துப்பாக்கியால் சுட்டுக்கொண்டது தெரியவந்தது. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு, கொண்ட செல்லப்பட்டார்.

ஆனால் சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். சம்பவம் குறித்து பெரிய மேடு போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்னை காரணமாக செந்தில் குமார் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top