பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு: ரூ.110ஐ நெருங்குவதால் பரபரப்பு!

சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன

இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் சற்று முன் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்ந்து உள்ளதாக அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் இந்த விலை ஏற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து தற்போது பார்ப்போம்

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்ததால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.23 என விற்பனையாகிறது.

சென்னையில் இன்று டீசல் விலை 28 காசுகள் உயர்ந்ததால் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.95.59 என விற்பனையாகிறது.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment