பெட்ரோல் 31 காசுகள், டீசல் 33 காசுகள் உயர்வு: சென்னை விலை நிலவரம்!

கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக சென்னையில் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இன்றும் பெட்ரோல் விலை 31 காசுகளும் டீசல் விலை 33 காசுகளும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே டீசல் விலை ஒரு சில மாவட்டங்களில் 100 ரூபாயை தாண்டி விட்ட நிலையில் தற்போது சென்னையிலும் 100 ரூபாயை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை தற்போது பார்ப்போம். சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 103.92 ரூபாய்க்கும் டீசல் விலை ஒரு லிட்டர் டீசல் விலை 99.92 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை குறைத்து விலையை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment