விண்ணை முட்டிய பெட்ரோல் விலை: மீண்டும் ரூ.101

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வந்தது என்பதும் குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வந்ததால் பெட்ரோல் பெட்ரோல் விலை ரூபாய் 100 ரூபாயை தாண்டியது என்பதும் டீசல் விலை ரூபாய் 100 நெருங்கியது என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனை அடுத்து சென்னையில் இன்று பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.01 என்ற விலையில் விற்பனையாகிறது.

அதேபோல் டீசல் விலை இன்று 34 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.96.60 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதே ரீதியில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே சென்றால் பெட்ரோல் விலை ரூ.110ம், டீசல் விலை ரூ.100ம் என உயர்ந்துவிடும் என அஞ்சப்படுகிறது.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment