Connect with us

சென்னை மாமன்ற ஆலோசனை கூட்டம்-அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!!

Chennai

தமிழகம்

சென்னை மாமன்ற ஆலோசனை கூட்டம்-அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!!

ஒவ்வொரு மாதமும் இறுதியில் மாநகராட்சிகளில் மாமன்ற கூட்டம் நடைபெறும். அந்த படி இன்றைய தினம் சென்னை மாநகராட்சியில் மாதாந்திர மாமன்ற கூட்டம் நடைபெற்றது.

அதன்படி இன்றைய தினம் நடைபெற்ற மாமன்ற ஆலோசனை கூட்டத்தில் சென்னை மாநகராட்சி சேர்ந்த 200 கவுன்சிலர்கள் கலந்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு மாதமும் செய்யப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் இந்த கூட்டத்தில் அறிவித்து விவாதிக்கப்படும்.

இதில் திடீரென்று இந்த கூட்டத்தில் இருந்து அதிமுக மாவட்ட உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததாக தகவல் கிடைத்தது. ஏனென்றால் அவர்கள் மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து வெளிநடப்பு செய்ததாக அதிமுக கவுன்சிலர்கள் தகவல் அளித்தனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் சொத்து வரிகள் உயர்த்தப்பட்டன. மேலும் 10 நாட்களுக்கு முன்பு திடீரென்று தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிலத்தை ஒதுக்கீடு செய்வது உள்ளிட்டவை குறித்து இந்த மாமன்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top