அடையாறு ஆற்றின் கீழ் 40 மீட்டர் ஆழத்தில் சுரங்கம்.. மெட்ரோ பணிகள் தீவிரம்

சென்னை அடையாறு பகுதியில் மெட்ரோ பணிகளுக்காக சுரங்கம் தோண்டும் பணியை விரைவில் தொடங்க இருப்பதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையின் அடையாளங்களில் ஒன்றான மெட்ரோ தற்போது முதல்கட்ட வழிப்பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்பதும் இதனை அடுத்து இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் ஆயிரம் 62646 ஆயிரம் கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை மூன்றாவது வழி பாதையும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை நான்காவது வழி பாதையும், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை ஐந்தாவது வழி பாதையும் என மூன்று கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

adyar riverஇந்த நிலையில் மாதவரம் – சோழிங்கநல்லூர் மெட்ரோ ரயில் பாதைக்காக அடையாறு ஆற்றின் கீழே கீழ் சுரங்கம் அமைக்கும் பணி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடையாறு ஆற்றில் தண்ணீர் இருப்பதால் மிதவை படகில் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு வருவதாகவும் 40 மீட்டர் ஆழத்திற்கு துளைகள் போடப்பட்டு மண் பரிசோதனை செய்யும் பணி முடிவடைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்த பகுதிக்கு சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளதாகவும் அந்த எந்திரங்களை பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் அடுத்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி முதல் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.