கனமழையால் சாலை போக்குவரத்தில் சிக்கல்: உதவிய மெட்ரோ ரயில்!

கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலை போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான சென்னை சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் இருசக்கர நான்கு சக்கர வாகனங்களும் பேருந்துகளும் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்த நிலையில் கனமழை காரணமாக ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மெட்ரோ ரயில் கூடுதல் நேரம் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கனமழை காரணமாக காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும் சாலை போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டு உள்ள பயணிகள் மெட்ரோ ரயிலை பயன்படுத்தி தங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது

பொதுவாக விடுமுறை நேரங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில் இயக்கப்படும் நிலையில் இன்று கூடுதல் நேரத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment