சென்னை மெட்ரோ ரயிலில் 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகை ஒட்டி 8 லட்சத்து 36 ஆயிரத்து 745 பேர் பயணித்துள்ளனர் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு வரலாற்றில் இல்லாத வகையில் கடந்த 13ஆம் தேதி அதிகபட்சமாக 2,66,464 பேர் பயணம் செய்திருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பொங்கல் பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் வசதிக்காக தேவைக்கேற்ப கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில் கடந்த 13ஆம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 2,66,464 பேர் பயணம் செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பாக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு 21,731 பயணிகளும் கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு 14,649 பயணிகளும் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு 13,607 பயணிகளும் விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு 12,909 பயணிகளும் பயணம் செய்திருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல் பொங்கல் பண்டிகை ஒட்டி கடந்த 13ஆம் தேதி 2.66 லட்சம் மக்களும் 14 ஆம் தேதி 1.62 லட்சமும் 15ஆம் தேதி 1.08 லட்சமும் 16ஆம் தேதி 1.34 லட்சமும் 17ஆம் தேதி 1.65 லட்சம் பயணிகளும் பயணம் செய்திருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.