சென்னை மக்களுக்கு ஒரு நற்செய்தி; ரூ.100 கோடியில் அசத்தல் மெட்ரோ திட்டம்!

சென்னையில் “லைட் மெட்ரோ” திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் விரைவில் ஆய்வு செய்ய உள்ளதாகவும், திட்டத்தை தயார் செய்யும் பணிக்கான ஒப்பந்தம் விரைவில் வழங்கப்படவுள்ளதாகவும் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் அறிவித்துள்ளது.

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் பரப்பளவு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய போக்குவரத்துத் திட்டத்தை தயார் செய்ய சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் முடிவு செய்துள்ளது. தேசிய நகர்ப்புற போக்குவரத்துக் கொள்கையின் அடிப்படையில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு திட்டமிடும் வகையில் இந்தப் போக்குவரத்து திட்டம் தயார் செய்யப்படவுள்ளது.

தற்போது சென்னை பெருநகரில் மெட்ரோ ரயில் இயங்கும் பகுதிகளுக்கு அருகில் உள்ள பகுதிகளை மெட்ரோ இரயிலுடன் இணைக்கும் வகையில் ‘லைட் மெட்ரோ’ திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தற்போது உள்ள மெட்ரா ரயில் திட்டங்களில் உயர் மட்ட பாதை அமைக்க ஒரு கி.மீ ரூ.200 முதல் ரூ.250 கோடியும், சுரங்கப்பாதை அமைக்க ரூ.500 முதல் ரூ.550 கோடியும் செலவாகும் ஆனால், இந்த லைட் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த ஒரு கி.மீட்டருக்கு ரூ.100 கோடி தான் ஆகும்.

எனவே, இந்த லைட் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்துள்ளது… திட்டத்தை தயார் செய்யும் பணிக்கான ஒப்பந்தம் விரைவில் வழங்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.