மெட்ரோ ரயிலில் இனி டோக்கன் சிஸ்டம் இல்லை: முக்கிய அறிவிப்பு!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகளுக்கு டோக்கன் சிஸ்டம் இதுவரை கொடுக்கப்பட்டு வந்த நிலையில் இனிமேல் டோக்கன்கள் வழங்கப்படாது என்றும் அதற்கு பதிலாக காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டுகள் வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில்களிலும் டோக்கன் சிஸ்டம் தான் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பயணம் செய்யும்போது கவுண்டரில் டோக்கன் பெற்று, பயணம் முடியும் நேரத்தில் டோக்கனை செலுத்தி விட்டு வரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக டோக்கன் சிஸ்டத்தை முடிவுக்கு கொண்டுவர மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டுகளை வழங்க இருப்பதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment