14 மாவட்டங்களில் கனமழை, சூறைக்காற்று: வானிலை எச்சரிக்கை!

கனமழை

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையும் கடலோர பகுதிகளில் சூறை காற்று எச்சரிக்கையையும் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை அறிவிப்பும், வரும் நாட்களில் மிக கனமழை அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.

அக்டோபர் 19 மற்றும் 20 ஆம் தேதி: சேலம், புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் ஆகிய மாவட்டங்களிலும் பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும்

அக்டோபர் 21ஆம் தேதி: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை,வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர் கோயம்புத்தூர், ஈரோடு, கரூர்,திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தேனி திண்டுக்கல் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும்.

அக்டோபர் 22ஆம் தேதி: கோயம்புத்தூர், நீலகிரி) மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் (நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் )மற்றும் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்

அக்டோபர் 23ஆம் தேதி: வேலூர் திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர் கோயம்புத்தூர், ஈரோடு, கரூர்,திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும், அதேபோல் நாளை மற்றும் நாளை மறுநாள் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print