Connect with us

9 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Tamil Nadu

9 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

5a815efeba11cc40d27a6706c99e2bac-1

தமிழகத்தில் மழை குறித்த நிலவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது அறிவித்து வரும் நிலையில் 9 மாவட்டங்களுக்கு மழை குறித்த எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இன்றும் நாளையும் நீலகிரி, கோவை, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டுஆகிய 9 மாவட்டங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் ஆகஸ்ட் 2ஆம் தேதி நீலகிரி, கோவை, கடலோர மாவட்டங்களிலும், ஆகஸ்ட் 3, 4 ஆகிய தேதிகளில்  நீலகிரி, கோவை, கடலோர மாவட்டங்களில் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னையை பொருத்தவரை இன்னும் நான்கு நாட்களுக்கு மேகமூட்டமாக இருக்கும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top