Tamil Nadu
5 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக மழை குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்திலுள்ள 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. அதேபோல் மேலும் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது
