Connect with us

5 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Tamil Nadu

5 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

d60cccbdbc56c903c701cb596bfabf75

தமிழகத்தில் மழை குறித்த அறிவிப்புகளை அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து வரும் நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழகத்தில் இன்று முதல் அதாவது செப்டம்பர் 8ஆம் தேதி முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது

மேலும் தென்மேற்கு பருவக்காற்று, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இந்த மழை பெய்ய இருப்பதாக கூறியுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

மேலும் வரும் 12ஆம் தேதி வரை தென்கிழக்கு வங்க கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல், அந்தமான் கடல் பகுதிகளில் சுமார் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் மீனவர்கள் 12ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top