இன்று 4 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை திருநெல்வேலி தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது

இருப்பினும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை குறித்த எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் தமிழகமே தத்தளித்து வரும் நிலையில் மீண்டும் 4 மாவட்டங்களில் கனமழை என்ற அறிவிப்பு பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment