தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு: கனமழை எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு!

கனமழை

தெற்கு வங்க கடலில் ஓரிரு நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், தென்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 40 முதல் 60 கிலோ மீட்டர் வரை சூறைக் காற்று வீச வாய்ப்பிருப்பதாகவும் அதனால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாளை முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print