13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் நீர்நிலைகள் நிரம்பி ஊருக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்றும் மற்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment