
செய்திகள்
இன்று 12 மாவட்டங்களில் கனமழை: காற்றழுத்த தாழ்வு மையம் எச்சரிக்கை
இன்று 12 மாவட்டங்களில் கனமழை: காற்றழுத்த தாழ்வு மையம் எச்சரிக்கை
அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் தோன்ற வாய்ப்பு இருப்பதை அடுத்து தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது
கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமானை ஒட்டியுள்ள பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள நீலகிரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, கோவை உள்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
அதேபோல் சென்னையில் இன்று மேகமூட்டத்துடன் காணப்படும் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் வாய்ப்பிருந்தால் கனமழை இன்னும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
