13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. பள்ளிகளுக்கு விடுமுறை உண்டா?

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

rain இந்த நிலையில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 7 மணிக்கு தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Rains Students Rep PTI 190522 12மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வட தமிழகத்திலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள பல பகுதிகளிலும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தமிழக கடற்கரையோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் ஆகிய பகுதிகளில் 65 கிலோமீட்டர் வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் மழை குறித்த எச்சரிக்கை விடப்பட்டு இருந்தாலும் பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை குறித்த எந்த அறிவிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.