அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை நீடிக்குமா ?” – பாலச்சந்திரன் விளக்கம்

அடுத்த 5 நாட்களுக்கு மீண்டும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவின் வடபகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாகவும் இது வடக்கு கேரளா, தெற்கு கர்நாடகம் கடற்கரை பகுதியின் வழியாக செல்லும் என்றும், இதன் காரணமாக மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் மழை பெய்யும் அவர் கூறினார்.

rain

இதன் காரணமாக நாளை தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும் இது மேலும் வலுவடைந்து மேற்கு திசையில் நகரும் என்றும் ஆனால் புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும் அந்தமான் கடல் பகுதியின் கிழக்குப் பகுதியில் நாளை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நகரும் என்பதால் தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்தார். சென்னை நகரின் பல பகுதிகளில் மிதமான மழையும் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் அவர்கள் தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.