வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு: இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை நீடிக்கும்?

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு காரணமாக இன்னும் ஒரு சில நாட்களுக்கு சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை நீடிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வரும் 30ஆம் தேதி தோன்றும் என்றும் அது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் டிசம்பர் இரண்டாம் தேதி வரை மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சென்னை உள்பட பல பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது என்பதும் இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டிசம்பர் இரண்டாம் தேதி வரை மேலும் மழை நீடிக்கும் என்ற அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment