இன்று முதல் 5 நாட்களுக்கு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை

இன்று முதல் தமிழகத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அந்தமான் பகுதி அருகே இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் 5 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

குறிப்பாக நீலகிரி கோவை விழுப்புரம் திருவள்ளூர் வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்பதால் அந்த பகுதி மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment